இராஜேஸ்கண்ணனின் சிறுகதைகள், திறனாய்வுகள், சமூகவியல் நோக்கிலான கட்டுரைகள், கவிதைகள் முதலியவற்றுடன் வெளிவந்துள்ள நூல்களையும் இங்கு படிக்கலாம்.

Saturday, June 5, 2021



'முதுசொமாக" எனது முதலாவது சிறுகதைத் தொகுதி. யாழ்ப்பாணம் தூண்டி வெளியீட்டகத்தினால் ஜுன் 2002இல் வெளியிடப்பட்டது. பத்து சிறுகதைகளை உள்ளடக்கிய இந்தச் சிறுகதைத் தொகுப்புநூல் 84 பக்கங்களில் கதைகளையும், பதினேழு பக்கங்களில் முன்னுரை, அணிந்துரை, நயப்புரைகளையும் கொண்டது. எனது முதலாவது நூலுக்கான பின் அட்டையிலான அறிமுகக் குறிப்பை எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் எழுதியுள்ளார். அறிமுகவுரையை எழுத்தாளர் தெணியான் அவர்களும் நயப்புரையை எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களும் எழுதி என் முயற்சிக்கு ஊக்கம் தந்திருந்தனர். வாழ்த்துரையை எனது பல்கலைக்கழக கல்விக் காலத்துப் பேராசிரியரான என்.சண்முகலிங்கன் வழங்கியிருந்தார். நண்பர் தூண்டி செல்வமனோகரனின் பெரும் முயற்சியால் வெளியான இந்தச் சிறுகதை நூலுக்கான வெளியீடு, நான் ஆரம்பநெறி முதல் கல்வி கற்ற பாடசாலையான தேவரையாளி இந்துக் கல்லூரியில் நடந்தது. அந்த வெளியீட்டு விழாவில் பேராசிரியர் சண்முகலிங்கன், எழுத்தாளர்களான செங்கை ஆழியான், தெணியான், காலாமணி முதலானோர் உரைகளாற்றி என்னை ஊக்கப்படுத்தினர். எனக்கு ஒரு அங்கீகாரத்தைத் தந்தனர். முதற்பிரதியை எழுத்தாளரும், விமர்சகருமான ஆ.கந்தையா அவர்கள் பெற்று என்னை கௌரவித்தார். இந்தச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகள் முதுமையின் தனிமைத் துயர்கள், சமூகத்தின் போலி கௌரவங்கள், புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் மன அவசங்கள், போர்க்காலத்து வாழ்வின் சிக்கல்களும் சிதைவுகளும், பெண்கள் மீதான வெளித்தெரியா வன்முறைகள், உண்ணாட்டு இடப்பெயர்வுகளின் அவலங்கள் என்பவற்றை பேசுகின்றன. 

No comments:

Post a Comment