இராஜேஸ்கண்ணனின் சிறுகதைகள், திறனாய்வுகள், சமூகவியல் நோக்கிலான கட்டுரைகள், கவிதைகள் முதலியவற்றுடன் வெளிவந்துள்ள நூல்களையும் இங்கு படிக்கலாம்.

Saturday, June 5, 2021



 'தொலையும் பொக்கிசங்கள்" எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு நூல். எழுத்தாளர் ஆ.இரத்தினவேலோன் அவர்களின் மீரா வெளியீட்டகத்தினால்(கொழும்பு), அதன் 79ஆவது பிரசுரமாக ஏப்ரல் 2009இல் வெளியிடப்பட்டது. 89 பக்கங்களைக் கொண்ட இந்த சிறுகதைத் தொகுப்புநூலில் பத்து சிறுகதைகள் உள்ளன. முன்னுரையை ஞானம் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் தி.ஞானசேகரன் அவர்கள் எழுதியுள்ளார். போர்க்கால வாழ்வைப் பிரதிபலிக்கும் கதைகள் இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. கதைகள் போரினாலும் கல்வித்துறையின் மேலாண்மைகளாலும் பாதிக்கப்படும் சிறுவர்கள் பற்றி கரிசனை எடுக்கிறது. பெண் ஆண் உறவில் வரும் அகச் சிக்கல்களை பேசுகிறது. இனமுரண்பாட்டுச் சூழலில் இனங்களுக்கிடையிலான பழைய தொடர்புகளை மீட்டுப்பார்க்கிறது. இந்தத் தொகுப்பில் அடங்கும் சிறுகதைகள் பல போட்டிகளில் பரிசு பெற்றவை. இதிலுள்ள 'தொலையும் பொக்கிசங்கள்" என்ற சிறுகதை பத்தாம் வகுப்புக்கான ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில், சிறுகதை ஒன்றைக் கற்பிப்பதற்கான மாதிரிக் கதையாக 2007இல் சேர்க்கப்பட்டிருந்தது.   

No comments:

Post a Comment