'இலக்கியத்தில் சமூகம்: பார்வைகளும் பதிவுகளும்" எனும் நூல் இலக்கியத்தின் சமூகவியலை பேசுகின்றது. சமூகவியல் கொள்கைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கியப் பிரதிகளையும், இலக்கியப் படைப்பாளிகளின் கருத்துநிலைகளையும் பகுப்பாய்வு செய்கிறது. ஜீவநதியின் 34ஆவது வெளியீடாக 2014இல் வெளிவந்த இந்த நூல் அந்த ஆண்டுக்கான சிறந்த திறனாய்வு நூலுக்கான வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பரிசை பெற்றது. 120 பக்கங்களைக்கொண்ட இந்த நூலில் 10 கட்டுரைகள் உள்ளடங்கியுள்ளன. மரபு மற்றும் நவீன இலக்கியங்களை சமூகவியல் புலமைப் பின்புலத்துடன் புரிந்துகொள்ள முனைந்துள்ள கட்டுரைகளாக அவை அமைந்துள்ளன.
No comments:
Post a Comment